Monday, August 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 62


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 62

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

* குறியிட்ட சொற்களுக்கு இணையான சொற்கள் புதிய சொற்கள்.


குறுக்காக:


5. தாழையூத்தில் வசிக்கும் இளைஞன் (2)

6. அழகும் நிறமும் தேஜசும் கொண்ட உருவங்கள் (6)

7. ஆற்று எல்லைப்புறம் துரையோடு கொஞ்சம் கைகலப்பு (5)

8, 3 நெடு: பக்தியே முக்தி தரும் எனும் திருமந்திரம் (3,3)

10. மாட்டுக்கு சூட்டுக்குறி இடும் ஆயுதம் (3)

12. கற்பு நாசமானதில்* தலைக்கனம் குறைந்தது அதிசயம் (5)

15. காகம் திரும்பவும் உள்ளே இருக்க அனுமதிப்பது உடன்பிறந்தவளுக்காக (6)

16, 14 நெடு: நிஜ அபராதிக்கு அதிகமாக தண்டனையளித்த அரசனுக்கு காட்டும் விசுவாசம் (2,3)


நெடுக்காக:


1. மகிழ்ச்சியற்ற முகத்தில் நரை ஒரு அடையாளம் (4)

2. எட்டுகாலுடன் இருக்கும் மனைவி ஒரு திவ்யப்பிறப்பு (5)

3. 8 குறு: பார்க்கவும்

4. தலைக்கவசத்துடன் சுற்றும் காமுகன்* ஒரு கோமாளி (4)

9. பிரமனது வாழ்நாளில்* பார்க்க முடிந்த தெய்வத்தரு (5)

11. நல்ல வங்கிகளில் இசைக்கப்படும் ராகம் (4)

13. ரொம்ப கறுத்தவரா மாறிமாறி சண்டை போடுவது? (4)

14. 16 குறு பார்க்கவும்


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    very challenging clues.

    took me several hours

    ReplyDelete
  2. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    " அருமை "

    ReplyDelete
  3. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Wonderful clues and some of them are little challenging too "

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்த குறிப்புகள்:கு. 7, 11 நெ. 2, 9, 13 "

    ReplyDelete
  5. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " All clues are interesting. Liked 2D the most. "

    ReplyDelete
  6. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிகவும் ரசித்த புதிர். எல்லாக் குறிப்புகளுமே, மிக மிக நன்றாக உள்ளன. "

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    As usual an interesting and challenging crossword. 2 Dn is an excellent clue.
    Congrats and keep it up.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 62 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. ஆர்.வைத்தியநாதன்
    2. கோவிந்தராஜன்
    3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    4. முத்து சுப்ரமண்யம்
    5. மாதவ் மூர்த்தி
    6. ஆனந்தி ராகவ்
    7. G.K.சங்கர்
    8. பவளமணி பிரகாசம்
    9. சாந்தி நாராயணன்
    10. ராமையா நாராயணன்
    11. சௌதாமினி சுப்ரமண்யம்
    12. சுரேஷ் பாபு
    13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    14. பாலாஜி
    15. பொன்சந்தர்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete