Tuesday, May 21, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 71


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 71

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


3. கற்புடையாள் ஆத்திரத்தில் குளிரில் மாலையில் வரவில்லை (4)

4. சர்ப்பத்தோல் போர்த்திய எஜமான் மேலாடைக்குள் துளிவிஷம் (3,3)

6. உலோகத்தட்டு கடையில் வாங்க சுற்றிலும் தடைசெய் (3)

7. ஆர்ப்பாட்டக்காரன் அரைகுறையாய் மென்ற சோளப்பொரி (2,3)

9. சுழலும் சக்கை (5)

10. தலைவலிக்கு கண்ணில் கல்லெறியலாம் (3)

12. குமரேசன் பாம்பிடம் அதிக உருக்கத்துடன் காட்டும் அன்புப் பிணைப்பு (3,3)

13. புத்த குகை அடைந்தது எட்டு உயிரினமா? (4)


நெடுக்காக:



1. தாயின் எண்ணம் அம்மாணவர்களுக்கு ரொம்ப தவறாகப்பட்டது (3,4)

2. இவ்வுலகில் பேச முடியும் கடவுள் (3)

3. கடைவீதி இல்லாது பாதிப்படைய பாதிப்படைய வைத்தாயே சரவணா! (5)

5. சூதாடியவர் சம்சாரம் பெரும்பாலும் ஒருவகையில் ரகுகுலத்தை சார்ந்தவர் (3,4)

8. திவ்விய தந்தை ஆன கிருத்துவ கடவுள் (5)

11. மரணாவஸ்தை பாதியாக குறைந்ததில் துள்ளுகிறாயா மணாளா? (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

2 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    10 .குறு மிக ரசித்த புதிர். கண்ணில் கல்லெறியலாம் என்பது நன்றாகக் குழப்பியது. கல் என்ற எழுத்துக்களை கண்ணில் இருந்து நீக்கி, ண்ணி எங்கே போடலாம் என்று குழம்பினேன்.

    எல்லாக் குறிப்புகளுமே மிக அருமையாக உள்ளன.

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    அருமையான, சவாலான குறிப்புகள்!

    ReplyDelete