Saturday, July 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 73


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 73

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் இரண்டு ஆங்கிலச்சொற்கள் கொண்டவை.


குறுக்காக:


4. கரணம் தப்பினால் நல்ல வரும்படியாம். எப்படியோ எல்லோரும் ஆரோக்கியம் (4,3)

6. கொஞ்சம் வித்தியாசமான மாறுபட்ட பெயர் (3)

7. குழல் விளக்கு சரியாகப் பொருத்தும் லைப் டியூட்டி முடியவில்லை (5)

9. பொன்னாடை போர்த்தும் மேளகர்த்தா (5)

10. முருகன் தீட்டு உள்ள குடிமகன் (3)

12. ஆழமுள்ள நீர்த்தடாகம் நீந்துவது கற்றுக்கொள்ள உதவும் (4,3)


நெடுக்காக:



1. விண்ணை விட்டுவந்த குரங்கின் சேஷ்டையின் புதுமையில் மணிவகைகள் (7)

2. 11 நெடு பார்க்கவும்

3. லண்டன்வாசியே! நான் உன்னை காதலிக்கிறேனடா (1,2,2)

5. குறிஞ்சித்திருடன் திகைக்க குள்ளன் குளித்தலை மறந்தான் (7)

8. உடன்பிறந்தவள் இருக்க திருச்சி லட்சுமி வேண்டாமே (5)

11, 2 நெடு: நற்குணம் பொருந்திய இளையவன் நம்பியதல்ல இது. அதிகம் மோசம்போனது. (3,3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

4 comments:

  1. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    10. முருகன் தீட்டு உள்ள குடிமகன் (3) 😂😂😂

    ReplyDelete
  2. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " நல்ல புதிர் "


    ReplyDelete
  3. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    நல்ல புதிர். நன்றி!

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 73 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      ராமையா நாராயணன்  
    2.      G.K.சங்கர்
    3.      முத்து சுப்ரமண்யம்         
    4.      மாதவ் மூர்த்தி 
    5.      ஆர்.வைத்தியநாதன் 
    6.      பொன்சந்தர்          
    7.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்                                             
    8.      பாலாஜி                  
    9.      பவளமணி பிரகாசம்            
      
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete