Sunday, October 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 76


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 76

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3, 11 நெடு. கணிதம் கொஞ்சம் தெரியாததால்தான் சரியாக தெரிந்துகொள்ள தீராத வேட்கை (4,3)

4. சிற்றங்காடி பெண்பறவை கடைத்தெருவுக்கு போய்விட்டு குடிக்க அலைந்தது (6)

6. பெரும்பாலும் இருக்கும், செல்லமாக அழைக்கும் பெண்ணின் பெயர் (3)

7. குறத்தி மகளின் நாடக வடிவப் பாடல் (5)

9. மதிப்பிற்குரிய கள்ளா! முழிக்கிறாயேடா! (2,3)

10. முதல் முறையாக உள்ளே அதே படையலே (3)

12. இறுதிச்சுற்றில் வென்றால் கிடைப்பது இருக்க தொகுப்பை இணை (3,3)

13. தமிழுக்கு பெருமை சேர்க்கும் சிறப்பு எழுத்து (4)


நெடுக்காக:


1. முதலில் வீணாய்ப் போன வீட்டு ருசிக்கு அலைகிறது விடுதலை பெற்ற வீட்டுப்பறவை (7)

2. 3 நெடு: பார்க்கவும்

3, 2 நெடு. இடையூறின்றி எதிர்க்க, ரத்தநிற தாயக்கட்டையை ரொம்பவும் உருட்டவேண்டும் (5,3)

5. நீரை உள்ளிழுத்து பாகில் ஊறவைத்த தின்பண்டம், செரிமானத்துக்கு நல்லது (3,4)

8. பொதிமாற்றி செப்பனிடுதல் தரும் தகுதி (5)

11. 3 குறு: பார்க்கவும்



Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

8 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    "மிக அருமை. எளிது போல் தோன்றுகிறது."

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    tough

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " As always all the clues were excellent and thought-provoking. Except the film name of 1 dn, I had not heard of any other film. But your clues are so good that I could get the answers.

    Congrats on your excellent work."

    ReplyDelete
  4. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    சினிமாக்கள் பெயர்களெல்லாமே தெரிந்தவையல்ல. குறிப்புகள் மிக மிகத் தெளிவாக இருந்ததாலும் குறுக்கெழுத்துகளின் துணையாலும் எளிதாக விடுவிக்க முடிந்தது,

    ReplyDelete
  5. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    "Interesting clues as usual."

    ReplyDelete
  6. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "As usual nice clues."

    ReplyDelete
  7. திரு குணா அவர்களின் கருத்து:

    4,9,10-அருமை

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 76 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      சுரேஷ் பாபு
    2.      கோவிந்தராஜன் 
    3.      ராமையா நாராயணன்            
    4.      ஆர்.வைத்தியநாதன்   
    5.      பாலாஜி
    6.      மாதவ் மூர்த்தி    
    7.      பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்                                        
    8.      விஜய் சங்கர்                    
    9.      G.K.சங்கர் 
    10.     நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்  
    11.     குணா   
    12.     ஆனந்தி ராகவ்  

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete