Wednesday, November 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 77


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 77

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.


குறுக்காக:


3. நெருக்கம்* குறைந்ததால் வெறுப்பதும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் (4)

4. கொஞ்ச நாட்கள் சாவுடன் போராடுபவன் தன்னை ஆண்டவன் என கூறிக்கொள்வான் (2,4)

6. அதிகமாக மணலில் திரியும் பெண்ணின் பெயர் (3)

7. வாத்தியார் பேச்சால் ரொம்பவும் கெட்டுப்போன பழங்குடி கிராமம் (5)

9. சாஸ்திரம் வலிமை இல்லாததால் மனக்குழப்பத்தில்* ராஜாங்கம (5)

10. 13 குறு. பார்க்கவும்

12. அன்னையின் அன்பு மயக்கத்தில் கணிசமாகத் தானே சம்பாதிப்பாய்? (6)

13, 10 குறு: பெரும்பாலும் தரம் பிரிக்கிறபோது தடுமாறும் தறுதலைப் பிள்ளை (4,3)


நெடுக்காக:


1. காற்று வரும் புறம் வாகன இருக்கை (4,3)

2. இடையில் பயம் இன்றி துப்பு கிடைக்கும் வழி (3)

3. வெள்ளத்தில் பாதி சொத்து பறிகொடுத்த திருச்சி பெண் சிவப்பானவள் (5)

5. பழைமைவாதி சம்பத்தா பலி ஆனார்? (7)

8. குதிரையில் போட்டதால் போர்வையை இழந்தவன் சிறப்பு பட்டம் பெற்றவன் (5)

11. படப்பிடிப்பிலிருக்கும் நாய்குட்டி (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another challenging and interesting crossword. I know that your clues are always interesting, but what surprises is that you have completed 79 puzzles with the same theme. Hats off and congrats."

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக இரசித்தவை: 5, 8 நெடுக்கு

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    I like 2 down very much

    ReplyDelete
  4. திரு விஜய் சங்கர் அவர்களது கருத்து:

    Liked 5 down and 11 down

    ReplyDelete
  5. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    "ரொம்ப கடினமாய் உள்ளது".

    ReplyDelete
  6. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    "Challenging and interesting clues."

    ReplyDelete
  7. திரு நாகராஜ் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " As usual nice clues "

    ReplyDelete
  8. திரு குணா அவர்களது கருத்து:

    5,11,7-அருமை

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 77 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      பவளமணி பிரகாசம்  
    2.      பொன்சந்தர்  
    3.      பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்      
    4.      சுரேஷ் பாபு 
    5.      முத்து சுப்ரமண்யம்    
    6.      ஆர்.வைத்தியநாதன்         
    7.      விஜய் சங்கர்                                          
    8.      மாதவ் மூர்த்தி                  
    9.      பாலாஜி 
    10.     ராமையா நாராயணன்    
    11.     G.K.சங்கர்
    12.     நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 
    13.    குணா 
    14.    ஆனந்தி ராகவ்  
      
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete