Thursday, February 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 80


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 80

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:



3. காளை இனி உயிரிழந்தால் புனித மாடு ஆகி விடும் (4)

4. அதிக பரிசு தந்தவனது மயக்கத்தில் கானகத்து கட்டழகி (6)

6. 10 குறு: பார்க்கவும் (3)

7. அசட்டு ராஜா கம்சன் ஒருவகையில் அரை அரக்கன் (5)

9. புத்திரனை செவிமடுக்குமாறு கூறு (3,2)

10, 6 குறு. நெஞ்சிலோர் கானம் ஒருவிதத்தில் பாதி இனியதரம், பாதி கீழ்த்தரம் (3,3)

12. பெரிதும் நல்லதே தன் வசம் கொண்ட வலிமையுள்ள நாடு (6)

13. உடன்பிறந்தவள் கோமதி அறிவில்லாமல் ஸ்வரங்களோடு கலந்தாள் (4)



நெடுக்காக:



1. மதுராந்தகம் மதுவிலக்கு ஆனதில் விருப்பமின்றி இசைக்கும் இன்ப இசை (4,3)

2. தந்ததை தர முடியாமல் தடுத்த தகப்பன் (3)

3. சூழ்ச்சிக்காரர்களை அழித்தல் தந்திரக்கார விலங்குகளை கொல்வது போல (5)

5. தென்றல் வரும் வழி வந்த சகுந்தலை சவால் சரியானதே (4,3)

8. நாதஸ்வரக்காரிக்கே அரைகுறையாய் ஆட்டம் காட்டும் அரவங்களுக்கு தலைவி (5)

11. காதலர் வாழ விட்டுவிட்டு சென்ற மகாபாரதத்து முனிவர் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    குறிப்புகள் அருமை

    மிகவும் ரசித்தது , பாதி இனியதரம், பாதி கீழ்த்தரம்

    ReplyDelete
  2. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    80 and still going very strong. Congrats on another great crossword. Keep it up

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிகவும் இரசித்தவை: 5, 13

    ReplyDelete
  4. திரு குணா அவர்களின் கருத்து:

    குறுக்காக 3,7,10,13
    நெடுக்காக 1,5

    ஆகியவை அருமை

    ReplyDelete
  5. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

    ReplyDelete
  6. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    Liked the construction of 3 very much and other clues are wonderful too.

    ReplyDelete
  7. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Nice clues.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 80 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1. ஆர்.வைத்தியநாதன்
    2. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    3. பவளமணி பிரகாசம்
    4. முத்து சுப்ரமண்யம்
    5. பொன்சந்தர்
    6. பாலாஜி
    7. குணா
    8. சௌதாமினி சுப்ரமண்யம்
    9. ராமையா நாராயணன்
    10. K.R.சந்தானம்
    11. மாதவ் மூர்த்தி
    12. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
    13. G.K.சங்கர்
    14. சுரேஷ் பாபு
    15. கோவிந்தராஜன்
    16. ஆனந்தி ராகவ்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete