Monday, January 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 79


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 79

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்றில் ஆங்கிலச்சொல் உள்ளது.


குறுக்காக:



3. கழனியில் முளைத்து மணி கழன்ற கையணி (4)

4. மனக்கதவு உள்ள முகப்புவழி (3,3)

6. நடுக்காடான மலையில் ஈனாத இளம்பசு (3)

7. சிரசாசனம் மட்டும் அரைகுறையாயும் தவறாகவும் செய்வது நெஞ்சில் உறுத்தும் (5)

9. உயிரோடு கவர்ந்திழுக்கும் தனிமை (5)

10. திரும்பவும் பாட்டே பாடும் பெண் (3)

12. ஆட்சி புரிவதற்கென தோன்றியவன் மாட்டோடு ஊர் எல்லையை விட்டு கஷ்டத்தில் வளர்ந்தான் (6)

13. மறைமதி மாவாட்டிட கொஞ்சம் உள்ளே நகரு (4)


நெடுக்காக:



1. ஆசைக்கொரு வலைத்தளம் அதிகம் காட்டாததால் காலம் மாறிவிட்டது (3,2,2)

2. குளிரில் தலைவாரும் பெண் (3)

3. கசடற கானகத்தில் பல்லி தலை வெட்டப்பட்டது (5)

5. துறவறம் பூண்ட நகரத்து மனிதர்? (7)

8. ஆராவமுதனின் இசையில் சிறிது மாற்றம் செய்வதே பிரதான எண்ணம் (3,2)

11. கெண்டை மீன் சுற்றி வர முடியாது கூவும் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    "மிக மிக அருமை."

    ReplyDelete
  2. திரு குணா அவர்களது கருத்து:

    3 (குறுக்காக), 3(நெடுக்காக), 7, 8, 13 ஆகியவை அருமை

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 6,9,13

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " beautiful clues "

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    3 across is a wonderful clue and others are nice too.

    ReplyDelete
  6. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Another excellent puzzle. I found it quite challenging. கிடாரி, ஏகாந்தம், மேனகா & பவானி had clues that evoked a mental sabaash. Congrats and keep it up.

    ReplyDelete
  7. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    ரசித்த குறிப்புகள் 9, 10, 13

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 79 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      பவளமணி பிரகாசம்  
    2.      ராமையா நாராயணன்  
    3.      மாதவ் மூர்த்தி 
    4.      சௌதாமினி சுப்ரமண்யம் 
    5.      பாலாஜி    
    6.      குணா 
    7.      ஆனந்தி ராகவ்                              
    8.      முத்து சுப்ரமண்யம்                  
    9.      ஆர்.வைத்தியநாதன் 
    10.    பொன்சந்தர் 
    11.    கோவிந்தராஜன் 
    12.    சுரேஷ் பாபு         
    13.    பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 
    14.    G.K.சங்கர்    
    15.    K.R.சந்தானம் 
    16.     நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 
            
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete