Wednesday, May 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 83


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 83

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.


குறுக்காக:



3. காலொடிந்த விலங்கு ஆறு (3)

4. பெரும்பாலும் கலவரத்திலிருக்கும் அழகிய வட சென்னையில் அம்மாவின் விளைநிலம் இருக்கிறது (3,3)

6. பெண் தெய்வம் முதலில் தேடிக் கொல் (3)

7. வாசகுமாரி கல்யாணப்பெண் (5)

10. நீண்டகாலம் விதவிதமாய் கடலில் கரையும் பெரும்பகுதி (5)

11. கல்லை எறிந்தது ஜனகனில்லை, அம்மா (3)

13. போர்ப்பறவை சவக்குழி கோதண்டனால் வடிவமைக்கப்பட்டது. அசுரனால்* அல்ல (6)

14. பாத்திரம் உள்ளே கொஞ்சம் ஓட்டையானாலும் கனமானது (3)



நெடுக்காக:



1. இல்லத்திலிருப்பவனின் ஆட்டத்தை அரைகுறையாக ஆனந்திப்பவள் (6)

2. போலீஸ் ஆகாதவரில் விட்டுப்போனவர் பாதி (3)

3. திருமணம் கூடுகையில் தொல்லையா? வேண்டாம் தூரம்போ (5)

5. அப்பெண் கால் அக்காள் போர்வைக்குள் நுழைந்தது (3)

8. ஆடைக்குறியின்றி சின்னக்கோட்டை பாறையில் போட உதவும் சுவரகழ்கருவி (6)

9. நட்பு கூட மணம் சேர்க்கும் (5)

10. நீர்ப்பரப்பை நினைவூட்டும் தானியம் (3)

12. உயிர்விட துடிக்கும் காடு (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

4 comments:

  1. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual wonderful clues.

    ReplyDelete
  2. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 6, 10, 13
    நெடுக்காக 1, 3, 5, 12
    ஆகியவை அருமை

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Quite a challenging puzzle. I am amazed by the consistent quality you maintain.
    Congrats and keep it up

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 83 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 
    2.      பொன்சந்தர் 
    3.      மாதவ் மூர்த்தி
    4.      சுரேஷ் பாபு  
    5.      G.K.சங்கர்  
    6.      குணா
    7.      பவளமணி பிரகாசம்                        
    8.      ஆர்.வைத்தியநாதன்                
    9.      முத்து சுப்ரமண்யம்    
    10.    பாலாஜி   
    11.    ஆனந்தி ராகவ்    
    12.     ராமையா நாராயணன்     
    13.    சௌதாமினி சுப்ரமணியம்   
    14.    பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்    
    15.    கோவிந்தராஜன்               

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete