Thursday, August 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 86


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 86

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.


குறுக்காக:


3. 11 நெடு: பார்க்கவும்

4. நார்த்தங்காயை பாதிக்கு மேல் கடித்து உண்ட திருமால் மாதொருபாகன் ஆனார் (6)

6. 2 நெடு. பார்க்கவும்

7. ஆரம்ப பூஜைக்காக குலம் விளங்க இடம் பெயர்ந்து அலங்கரிக்கப்பட்ட மலர்த்தளை (5)

9. இரு ஊர்களுக்குள் நடுவில் இருக்கும் கணவன் மீதுள்ள பற்று (5)

10. தஞ்சைக்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் (3)

12. வீடு இல்லாத இவரால், சம்பாத்தியத்தில் நடத்தப்படும் கிராமிய ஆடல் வடிவம் (6)

13. உயிருடன் ஒரு பறவை தலையை அறுத்தெறிந்த நீர்வீழ்ச்சி (3)


நெடுக்காக:


1. பாஞ்சாலி ஒழுக்கமான மனைவி? (7)

2, 6 குறு. நெஞ்சில் நெருப்பு பட முடியாமல் உள்ள விளக்கு (3,3)

3. நெஞ்சுருக வழியனுப்புதல் ஆடையின்றி பரிதவிக்கும் பிரிவில் கிடையாது (5)

5. வடக்கில் கலங்கலாக மாறிய பெரும் நீர்ப்பரப்பு (7)

8. ஒரு பூதத்தின் மனைவி கனல் கக்கும் தெய்வமகள் (5)

11, 3 குறு. உதாரகுணம் கொண்ட அதிகாரி பெரும் கஷ்டத்தில் புரளவே பிறந்தாரா? (3,3)



Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்த குறிப்புகள் கு. 9, 12, 3; நெடு. 11

    ReplyDelete
  2. திரு ஆர். நாராயணன் அவர்களது கருத்து:

    "மிக அருமை, மிக ரசித்தேன்"

    ReplyDelete
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " Good puzzle "

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    அருமையான புதிர்.

    குறு 12, நெடு 1 ரசித்த குறிப்புகள்.

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து

    Excellent as always

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,
      
    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 86 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      பாலாஜி    
    2.      அருணா  
    3.      சுரேஷ் பாபு 
    4.      மாதவ் மூர்த்தி
    5.      விஜயசங்கர்      
    6.      பவளமணி பிரகாசம் 
    7.      ஆனந்தி ராகவ்                     
    8.      முத்து சுப்ரமண்யம்               
    9.      பொன்சந்தர்   
    10.     ராமையா நாராயணன்   
    11.    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்   
    12.     கோவிந்தராஜன்   
    13.    சௌதாமினி சுப்ரமணியம்  
    14.    G.K.சங்கர்
    15.     பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்   
    16.    ஆர்.வைத்தியநாதன்  
                      
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete