Sunday, September 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 87


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 87

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையானது புதிய சொல்.


குறுக்காக:


3. ஜெனிலியா போர்வையை பயன்படுத்திய பெண் (2)

5. வர்த்தகம் செய்யும் விவகாரத்தில் அகந்தையின்றி போரிடு (4,2)

6, 11 குறு. நடுநிலையான ஏழையோடு சேர்த்து சொல்லும் சொல்லில் பாய்ச்சும் அன்பு நீர் (2,2)

7. வெண்மை கலந்த சிவப்பில்* மலரத் தொடங்கும் குளத்துப்பூ (5)

10. அறுபடைவீடு குமரன் அரைகுறை சிப்பாய் (5)

11. 6 குறு: பார்க்கவும்

12. பூங்காவன பார்வதிதேவி அறுபடை வீடொன்றை ஆள்பவள் (4,2)

14. ஒளிதரும் பெண்ணின் பெயர் (2)


நெடுக்காக:


1. சத்தம் போட்டு யுத்தம் செய்வதென்பது வாட்போர் (3,3)

2. அவதார புருஷன் கொஞ்சமாக பேசுவாராம் (2)

3. வடநாட்டில் வாழ்க பாரதம் (5)

4. கனியொன்று கள்ளுடன் கரையோரம் கிடைக்கும் பெருநகரம் (4)

8. காமவேந்தன் மகன் தலைக்கவசமின்றி அடைந்தது பழைய சென்னையா? (4,2)

9. இந்த முனிவர் ஊரில் கிடைப்பது மாடு மேய்ந்துவிட்ட ஆரஞ்சோ? (5)

10. இஸ்லாமியரின் தியாகத் திருநாள் (4)

13. இந்த ஊர் எல்லையை விட்டால் தேன் கிடைக்கும் (2)




Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    ரசித்தவை: நெடு. 1, 4, 8

    ReplyDelete
  2. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:

    Another excellent and interesting puzzle living up to your high standard. Keep it up

    ReplyDelete
  3. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 1, 6, 11, 10

    நெடுக்காக 8, 9

    ஆகியவை அருமை

    ReplyDelete
  4. திரு ஆர். நாராயணன் அவர்களது கருத்து:

    மிக அருமையான புதிர்.

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual the clues are top-class.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 87 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1. கோவிந்தராஜன்
    2. பவளமணி பிரகாசம்
    3. மாதவ் மூர்த்தி
    4. சுரேஷ் பாபு
    5. முத்து சுப்ரமண்யம்
    6. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    7. பாலாஜி
    8. ஆர். நாராயணன்
    9. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
    10. சௌதாமினி சுப்ரமணியம்
    11. பொன்சந்தர்
    12. ஆனந்தி ராகவ்
    13. G.K.சங்கர்
    14. குணா

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete