இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
|
|
குறுக்காக:
3. இளவரசியும் மன்னன் மகள் (5)
6. மலையுச்சி அடைந்த மனிதன் இறங்கினால் ரசிகனின் மதம் மாறும் (4)
7. விருப்பமின்றி புகை பிடிப்பவன் எப்படியும் நண்பன் ஆகமாட்டான் (4)
8. மீண்டும் தேறுபவன் ஆண்டவன் கைவிட்டால் இறக்கும் நிலையில் இருப்பான் (6)
13. ஆறாவது ராசிக்காரி மணமாகாத மங்கை (6)
14. மரியாதைக்குரியவன் பல இடையூறுகளைக் களைந்தாலும் சாகமாட்டான் (4)
15. சம்பாத்யம் குறைந்தது உண்மைதான் (4)
16. பணிப்பெண் காவேரி சிலைக் கையை உடைத்ததால் தலைமுடியை இழந்தாள் (5)
நெடுக்காக:
1. பரமசிவம் ஒரு குற்றம் குறையற்ற மாணிக்கம் (5)
2. மாலையில் காய்ந்த நீலாம்பரி தொடுப்பதின் தொடக்கம் (4)
4. பங்கஜம் பம்பரமாய் சுழன்றதில் வீண் பெருமை கொண்டாள்
5. கற்பவன் கண்ணன் மாவடு பார்த்து விட்டால் கலக்கிடுவான் (4)
9. யுத்தத்தின் ஆரம்பத்தில் சிறிது வன்முறையை கையாண்ட இளைஞன் (3)
10. பிராமணப்பெண் குழந்தை ஆத்திரத்தில் மாலையில் வரவில்லை (5)
11. விழி பரிமாணம் குறைந்ததால் கலங்கினாள் பாரதியின் காதலி (5)
12. குழிவிழும் குமரி எழிலை குலைத்தால் கொடுந்தீ கொப்பளிக்கும் (4)
13. பெண்ணை ஒருவனுக்கு கட்டிக் கொடுக்கும் தானம் (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |
1. பாபு (1971)
2. பாபா (2002)
3. ஜேஜே (2003)
4. காக்க காக்க (2003)
5. கொக்கி (2006)
6. அஆஇஈ (2009)
7. ராரா (2011)
8. லீலை (2012)
9. யாயா (2013)