இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
விடைகளில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலச் சொல்லாக இருக்கும்.
|
|
|
குறுக்காக:
5. இளையவன் தமையனை பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,4)
6. மொரிஷியஸ் தீவுகளில் வாழும் முனிவர் (2)
7. வையம் நடுவில் உறைபனி மூடிய உயர்ந்த மலை (4)
9. மதிவாணன் மயங்கியதால் இறுதியில் காண முடியாத விண்ணிலவு (4)
10. மதுரைப்பூக்காரி மூத்தமகனின் காலில் தலைகுப்புற விழுந்தாள் (4)
12. மன்னர் தலைவன் துரைராஜன் காலொடிந்ததில் கலங்கினான் (4)
13. மௌனமாயிருப்பாளா துர்க்கை? (2)
14. குடியை விட்டதால் நமது கலை தரம் மாறுபட்டு உயர்ந்த ஊர் (6)
நெடுக்காக:
1, 2. கடைக்கு போனால் கிடைக்கும், கண்ணன் ஆரம்பத்தில் தேடி அலைந்த மதுக் கோப்பை (2,4)
2. 1 நெடு: பார்க்க
3. விரும்பியவனை அழை. குறைவாகவே அவன் பேசுவான் (3,1)
4. சிவகங்கைச்சீமை வீரன் குழப்பத்தில் முதல் மரியாதையை கௌரவத்துக்காக விட்டுக் கொடுத்தது பெருமதிப்புக்குரியது (3,3)
8. முடியாத ஒன்றை செய்ய திரிக்கும் பொடிமண் வடம் (3,3)
11. கவர்ந்திழுக்கும் காந்தி மதம் மாறியது புத்தியில்லாததால் (4)
12. நடராஜன் கடை சேதமடைந்தாலும் கடன் இல்லாமல் கம்பீரமாக நடக்கிறது (4)
15. விருப்பமின்றி அரவான் எடுத்த ஓட்டம் (2)
Transliteration scheme:| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |