1931-ம் ஆண்டு வெளிவந்த "காளிதாஸ்" தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து, இதுநாள்வரை 6000 க்கும் அதிகமான தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வேற்று மொழியில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த பட்டியலில் சேராது.
50 வருடங்களுக்கு முன்பு சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். உதாரணமாக எம்.ஜி.ஆர். நடித்து 1941ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்திற்கு வேதவதி அல்லது சீதா ஜனனம் என்று தலைப்புகள் வைத்திருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இதுமாதிரியான இரண்டு தலைப்புகள் வைப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆனால் அக்காலம் முதல் இன்றுவரை பல தமிழ் திரைப்படங்களுக்கு ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் திரைப்படத் தலைப்புகளுக்கு பஞ்சமாகி விட்டது போலும்.
இது போதாதென்று ஒரே தலைப்பைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று தயாரிப்பாளர்கள் (ஒருவருக்கொருவர் அறியாமல்) திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். பிறகு விஷயம் தெரிந்தபின் வழக்கு, சமரசம் என்று போய் ஒருவழியாக சமாதானம் ஆகி, ஒரு தயாரிப்பாளர் திரைப்படத் தலைப்பை மாற்றிவிடுவார்.
முன்பாக சில தமிழ் திரைப்படங்களுக்கு வேற்று மொழி சொற்களை (குறிப்பாக ஆங்கில சொற்களை) வைத்திருந்தனர். கடந்த கலைஞர் ஆட்சியில் தமிழில் தயாரிக்கப்பட்டு தமிழ் சொற்களையே தலைப்புகளாக வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதாக அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், வரிவிலக்கு பெறுவதற்காகவே தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் சொற்களையே தலைப்பாக வைத்துவந்தனர். ஆனால் தற்போது திரும்பவும் வேற்றுமொழிச் சொற்களை தமிழ் திரைப்படங்களுக்கு தலைப்பாக வைப்பது தொடங்கிவிட்டது வேதனைக்குரிய விஷயம். (உதாரணம்: பீட்சா, வில்லா, ஜில்லா, பிரியாணி, ரம்மி, டீல், பென்சில் போன்றவை).
சில தயாரிப்பாளர்கள் புது திரைப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே, படப்பிடிப்பை தொடங்கி விடுகிறார்கள். சமீபத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள ஆரம்பம் திரைப்படத்திற்கு தலைப்பை படப்பிடிப்புகள் முடிந்தபின்னர்தான் வைத்தார்கள்.
சில தயாரிப்பாளர்கள் ஒரு தலைப்பை வைத்து படப்பிடிப்பை தொடங்கிவிடுகிறார்கள். பிறகு நடுவில் தலைப்பை மாற்றிவிடுகிறார்கள். உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த நய்யாண்டி திரைப்படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு - சொட்ட வாள குட்டி.
இப்படியாக திரைப்படத்திற்கு தலைப்பு வைப்பதில் பல முறைகளும், சிக்கல்களும் இருந்து வந்துள்ளன / வருகின்றன.
ஓரெழுத்து திரைப்படங்கள் :
முதன் முதலில் தமிழில் ஓரெழுத்தை தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம்: நீ. 1965ல் இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடித்திருந்தனர். இதன்பின் தமிழில் ஓரெழுத்தைக்கொண்டு சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
ஓரெழுத்து தலைப்புடைய திரைப்படங்களின் பட்டியல்: (தலைப்பும், வெளிவந்த ஆண்டும்)
1. நீ (1965)
2. தீ (1981)
3. ஜி (2005)
4. ஈ (2006)
5. லீ (2007)
6. ஃ (2008)
7. பூ (2008)
8. க (2009)
9. தீ (2009)
10. மா (2010)
11. வ (2010)
12. தா (2010)
13. கோ (2011)
14. டூ (2011)
15. மை (2012)
16. கை (2012)
படப்பிடிப்பில் இருப்பவை:
1. உ
2. ஐ
ஒரு எண் கொண்ட திரைப்படங்களின் பட்டியல்:
1. 3 (2012)
2. 4 (2013)
3. 6 (2013)
அதிக தமிழ் எழுத்துக்களை கொண்ட திரைப்படம்:
இதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களிலேயே, அதிக எழுத்துக்களை (மிக நீளமான) தலைப்பைக் கொண்ட திரைப்படம்:
ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
மன்சூர் அலி கான் கதாநாயகனாக நடித்து 1993ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தலைப்பு மொத்தம் 42 தமிழ் எழுத்துக்களைக் கொண்டது.
இப்போது இந்த மலர் - 1 க்கான கேள்வி:
அடுத்து அதிக எழுத்துக்களை தலைப்பாகக் கொண்டு தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படம் எது? / திரைப்படங்கள் யாவை?
விடையை பின்னூட்டம் மூலமாக 28.10.2013 க்குள் அனுப்புங்கள்.
ராமராவ்
நடுவில சில பக்கத்தைக் காணோம்
ReplyDeleteகண்ணா லட்டு திங்க ஆசையா
ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி
மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
முத்து,
ReplyDeleteவிடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.
நீங்கள் அனுப்பிய விடைகளில் " ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி" தான் அதிக எழுத்துக்களை திரைப்பட தலைப்பாக கொண்ட தமிழ் திரைப்படம். இது 19 தமிழ் எழுத்துக்களை கொண்ட திரைப்படம்.
இரண்டு தலைப்புகளை கொண்ட திரைப்படங்கள் கணக்கில் வராது. (மரகதம் .... கொலை ).
ஆனால் 20 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
அவற்றை கண்டுபிடித்து அனுப்புங்கள். இறுதி தேதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
Azhagai Irukkirai Bayamai Irukkirathu
ReplyDeleteUxhavukkum thozhilukkum vanthanai seyvom
Madhav,
Deleteஉங்கள் விடைகள் இரண்டும் சரி. தமிழில் அனுப்பலாமே. பாராட்டுக்கள். நன்றி.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
ReplyDeleteஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
முத்து,
Deleteஉங்கள் விடைகள் இரண்டும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
திரைக்கதம்பம்
ReplyDeleteமலர் - 1
விடை;
1.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் .
2.அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது .
மதுமதி,
Deleteசரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.