Thursday, October 31, 2013

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 1

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 1

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

குறுக்காக:
5.கருநாகம் தீய்ந்துபோக விட்டது நாங்கள்தான் (2)
6.கெட்டியான அல்வாவாகிரு. கரைந்தால் பக்கத்‌தில் கூப்பிடு (1,4,1)
7.தெருப்புறம் ஓரங்களில் காய்வது கேட்கும் திறனற்ற சாமி (4)
8.கலங்கிய அனைவரின் வரிவிலக்கு பெற்றவள் (3)
10.பசு கடவுள் என எண்ணும் ஆள் (3)
12.கனிப்பொருளை இழந்து கலங்கிய சீதாவை கவராது கவர்பவனா? (4)
15.மணிக்(க/கா)ட்டு ஒலி (2,2,2)
16.சவாலில் ராமனால் வஞ்சிக்கப்பட்டவன் (2)

நெடுக்காக:
1.இருபக்கமும் பணம் பாழாய் போகும் நகரம் (4)
2.மாலை மலரா மாறி மலரானது (5)
3.ஆறுதலை தரும் இறைவா (3)
4.அர்ஜுனனுக்கு எதிரி? (4)
9.பாழடைந்தாலும் சிறை வசதிக்கு குறையில்லை என்றாள் பார்வதி (5)
11.நட்சத்திரம் இழந்த சாதாரணக் கையா ராஜகுரு? (4)
13.பாதியில் மங்கள வீணை மீட்டுபவள் ஒரு திருடி? (4)
14.கேள்வி வளையம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

 

10 comments:

 1. முத்துசுப்ரமண்யம் அவர்களது கருத்து:

  "மிகவும் ரசித்தேன். வடமேற்கு மூலை நான்கு குறிப்புக்களும் மிக்க் கடினமாக இருந்தன."

  ReplyDelete
 2. சுரேஷ் அவர்களது கருத்து:

  "கொஞ்சம் குறிப்புகள் திருகுதாளமாகத்தான் இருக்கின்றன. 9 வது குறிப்புக்கு ஏறத்தாழ 20 நிமிஷம் செலவழித்தேன்.

  நல்ல முயற்சி

  ReplyDelete
 3. யோசிப்பவர் அவர்களது கருத்து:

  மிகவும் ரசித்த குறிப்புகள் -> 10, 12, 7, 4.

  ரொம்ப நல்லாயிருந்தது. சினிமாப் பெயர்களாய் இருந்தது நல்ல சுவாரஸ்யம்.

  ஆனால் உங்கள் கட்டங்கள் இரண்டு பாகமா பிரிஞ்சிட்டதாலே, ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல், இரண்டு குறுக்கெழுத்துக்கள் ஆகிவிட்டதே. அதை மட்டும் அடுத்த தடவை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

  மேலும் பல குறுக்கெழுத்துக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்!!

  ReplyDelete
 4. நாகராஜன் அவர்களது கருத்து:

  "Wow... Nice way to create the crossword with movie names... All the clues are very apt and wonderful. Keep up the good work. Expecting more crosswords from you." .

  ReplyDelete
 5. நாராயணன் ராமையா அவர்களின் கருத்து:

  "மிக எளிதாகவும் , ரசிக்கும்படியும் இருக்கிறது"

  ReplyDelete
 6. வீ. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

  "எல்லா குறிப்புகளுமே அருமை. சிந்திக்க தூண்டியவை கனி பொருளை இழந்து பெற்றது, பாழடைந்தலும் விடைகள்"

  ReplyDelete
 7. K. R. சந்தானம் அவர்களது கருத்து:
  " Thanks for giving a very good thought provoking puthir."

  ReplyDelete
 8. பார்த்தசாரதி சீனிவாசன் அவர்களது கருத்து,

  An excellent crossword with very good clues. Welcome to the Tamil cryptic crossword compilers' Club. Though I liked all the clues, as a setter, I liked 8Ac (கலங்கிய அனைவரின் வரிவிலக்கு பெற்றவள் (3) for the pun on பெற்றவள்) and 4Dn. அர்ஜுனனுக்கு எதிரி? (4) the most.

  The other clues that I liked are

  குறுக்காக:

  7.தெருப்புறம் ஓரங்களில் காய்வது கேட்கும் திறனற்ற சாமி (4)
  13.பாதியில் மங்கள வீணை மீட்டுபவள் ஒரு திருடி? (4)
  12.கனிப்பொருளை இழந்து கலங்கிய சீதாவை கவராது கவர்பவனா? (4)
  10.பசு கடவுள் என எண்ணும் ஆள் (3)

  நெடுக்காக:

  1.இருபக்கமும் பணம் பாழாய் போகும் நகரம் (4)
  2.மாலை மலரா மாறி மலரானது (5)
  3.ஆறுதலை தரும் இறைவா (3)
  4.அர்ஜுனனுக்கு எதிரி? (4)

  Congrats again on an excellent crossword

  ReplyDelete
 9. சௌதாமினி சுப்பிரமணியம் அவர்களது கருத்து:

  "Good Attempt"

  ReplyDelete
 10. திரை குறுக்கெழுத்துப் புதிர் -1 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:

  1. முத்து சுப்ரமண்யம்
  2. சுரேஷ் பாபு
  3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
  4. யோசிப்பவர்
  5. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
  6. ராமையா நாராயணன்
  7. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
  8. K.R.சந்தானம்
  9. பவளமணி பிரகாசம்
  10. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
  11. மாதவ் மூர்த்தி
  12. நாகமணி ஆனந்தம்
  13. சௌதாமினி சுப்ரமண்யம்
  14. லாவண்யா சுதாகர்
  15. சாந்தி நாராயணன்
  16. மதுமதி விட்டல்ராவ்

  ஒரு சில நண்பர்களுக்கு மேலும் உதவி குறிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தது. பெரும்பாலோர் முதல் முயற்சியிலேயே சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள்.

  சரியான விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

  திரை குறுக்கெழுத்துப் புதிர் பற்றிய கருத்துக்களையும், எந்தெந்த குறிப்புகள் மிகவும் பிடித்திருந்தன என்பதையும் எழுதியனுப்பியிருந்த எல்லா நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

  திரு வாஞ்சிநாதனுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் குறுக்கெழுத்துப் புதிர்களை வழங்கிவரும் திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்கள் தமக்குப் பிடித்த குறிப்புகளைக் குறிப்பிட்டிருந்ததோடின்றி, இந்த திரை குறுக்கெழுத்துப் புதிரை மிகவும் பாராட்டியிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

  ReplyDelete