Friday, November 15, 2013

திரைக்கதம்பம் மலர் - 2



திரைக்கதம்பம்    மலர் - 1 ல் கேட்கப்பட்ட கேள்வி:

"ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட  ராஜ  கம்பீர  காத்தவராய  கிருஷ்ண காமராஜன்"
 
திரைப்படத்தை அடுத்து அதிக எழுத்துக்களை தலைப்பாகக்   கொண்டு  தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படம்  எது? / திரைப்படங்கள் யாவை? 

சரியான விடைகள்:

1.    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 
2.    அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

இந்த திரைப்படங்களின் தலைப்புகள்  20  எழுத்துக்களைக் கொண்டவை.  

இந்த சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   Madhav, முத்து, மதுமதி 
 
இவர்கள்  மூவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.

குறிப்பு: 
1.       இரண்டு தலைப்புக்கள் கொண்ட திரைப்படங்கள் கணக்கில் சேராது.
2.       அடுத்து அதிக  (19) எழுத்துக்களை தலைப்பாக கொண்ட திரைப்படங்கள்:  
                 1.  ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 
                 2.  பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது 
 
திரைக்கதம்பம் மலர் - 2

திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.

தமிழ் மொழி,   உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, உயிர்மெய்யெழுத்துக்கள் என மொத்தம் 247 எழுத்துக்களைக்  கொண்டது.  இவற்றைத் தவிர, ஜ, ஸ, ஷ, ஹ   என்ற எழுத்துக்களை அடிப்படையாகக்   கொண்ட  வடமொழி   எழுத்துக்கள்  52ம், தமிழில் உபயோகத்தில் உள்ளன.
 
மெய்யெழுத்துக்களை தவிர, மற்ற எழுத்துக்களில் ஓரெழுத்தை  தலைப்புகளாக  கொண்டு  திரைப்படங்கள் வெளிவந்துள்ளதையும்,  வெளிவரப்போவதையும்  மலர் - 1 ல் பார்த்திருக்கலாம். 
 
ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களை தலைப்பாக கொண்டுள்ள திரைப்படங்களை ஆராய்ந்தால்,

ஒரேழுத்துக்குமேல் உயிரெழுத்துக்களை மட்டுமே தலைப்பாக  கொண்டு தமிழில் வெளிவந்த ஒரே திரைப்படம்:          அ ஆ இ ஈ 
 
மெய்யெழுத்துக்களே  இல்லாமல் தலைப்புகளைக் கொண்டு எத்தனையோ  திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.  உதாரணமாக, மெய்யெழுத்துக்களே  இல்லாமல், 2, 3, 4, 5, 6, 7 எழுத்துக்களைக் கொண்ட  திரைப்படத் தலைப்புகள்:
 
2 எழுத்துக்கள்:   ஆசை,  ஐயா,  குஷி,  பசி,  மாயி ..............
3 எழுத்துக்கள்:   தலைவா,  பிரியா,  அழகி,  மிளகா,  தவசி ..............          
4 எழுத்துக்கள்:   மகாநதி,  சரவணா,  திருடாதே,  பாதபூஜை .............
5 எழுத்துக்கள்:   கலையரசி,  தகதிமிதா,  குடியரசு,  அமராவதி ............
6 எழுத்துக்கள்:   தாமிரபரணி,  பணமா பாசமா, சதி லீலாவதி,  ............
7 எழுத்துக்கள்:   பிரியமானவளே, விவரமான ஆளு, நீ ஒரு மகாராணி  .......
 
இதற்கு மேல் மெய்யெழுத்துக்களே  இல்லாமல்  8, 9, 10, 11 எழுத்துக்களை தலைப்புகளாகக்  கொண்ட  திரைப்படங்கள்  மிகவும் குறைவு.
 
திரைக்கதம்பம்  மலர்  - 2  க்கான கேள்வி:
 
மெய்யெழுத்துக்களே  தலைப்புகளில் இல்லாத  8, 9, 10, 11 எழுத்துக்களைக் கொண்ட  திரைப்படங்களின்  பெயர்களை  நண்பர்கள்  அனுப்ப வேண்டும். நண்பர்களுக்கு எவ்வளவு திரைப்படங்களின் பெயர்கள் தெரிகிறதோ, அவற்றை தொடர்ந்து அனுப்பலாம்.  விடைகளை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
 
குறிப்பு:
விடைகள் மொத்தமே  15 க்கும்  குறைவான திரைப்படங்கள் தான். ஒரே ஒரு திரைப்படம் தான் மெய்யெழுத்துக்களே  இல்லாமல்  அதிகமாக 11 எழுத்துக்களைக் கொண்டது.  பெரும்பாலான திரைப்படங்கள் 1980 (1980 - 1989) களில் வெளிவந்தவை.  

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.

http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்   

9 comments:

  1. மாமியாரா மருமகளா (9) - 1982
    யாரோ எழுதிய கவிதை (9) - 1986
    ஒரு இரவு ஒரு பறவை (10) -1981
    திருமதி ஒரு வெகுமதி (10) - 1987

    இப்போதைக்கு இது; முடிந்தால் மேலும் தொடர்வேன்!

    ஒரு வாரிசு உருவாகிறது (11) - 1982
    ஒரு ஓடை நதியாகிறது (10) - 1983

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      1980 களில் வெளியான, 7 எழுத்துக்கு மேல் தலைப்புகளாகக் கொண்ட, அவற்றில் மெய்யேழுத்துக்களே இல்லாத 6 திரைப்படங்களையும் விடைகளாக அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. திரைக்கதம்பம் மலர் - 2

    1.லீலாவதி சுலோசனா
    2.உயிரோடு உயிராக
    3.வெயிலோடு விளையாடு
    4.திரு திரு துரு துரு
    5..அதிரூப அமராவதி
    6.மாமியாரா மருமகளா
    7.யாரோ எழுதிய கவிதை
    8.இளசு புதுசு ரவுசு
    9.அனுபவி ராஜா அனுபவி
    10.ஒரு இரவு ஒரு பறவை
    11.ஒரு ஓடை நதியாகிறது
    12.திருமதி ஒரு வெகுமதி
    13.ஒரு வாரிசு உருவாகிறது .
    14.சிகாமணி ரமாமணி

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      மெய்யெழுத்துக்களே தலைப்புகளில் இல்லாத 7 எழுத்துகளுக்கு மேல் திரைப்படத் தலைப்புகளை கொண்ட எல்லா ( 14) திரைப்படங்களின் பெயர்களையும் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. இனிமை இதோ இதோ
    ஒரு ஓடை நதியாகிறது

    ReplyDelete
    Replies
    1. மாதவ்,

      "இனிமை இதோ இதோ" திரைப்படம் 7 எழுத்துக்கள் உடையது. சரியான விடையில்லை. மற்ற விடை " ஒரு ஓடை நதியாகிறது" சரி.

      Delete
  4. http://www.vellitthirai.com/
    http://reversetamilcinema.blogspot.com/
    இரண்டு தளங்களிலும் தேடிக் கிடைத்தவை:

    லீலாவதி சுலோசனா (1936)
    அனுபவி ராஜா அனுபவி (1967)
    சிகாமணி ரமாமணி (2001)
    இளசு புதுசு ரவுசு (2003)
    உன்னாலே உன்னாலே (2007)
    வெயிலோடு விளையாடு (2012)

    இதற்கு மேல் தேடி விடை கண்டு பிடிக்க நாட்டமில்லை. அடுத்த புதிரில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      "உன்னாலே உன்னாலே" தலைப்பில் மெய்யெழுத்துக்கள் உள்ளனவே. அது மட்டும் சரியான விடையில்லை. மேலும் 5 திரைப்படத் தலைப்புக்கள் அனுப்பியிருக்கிறீர்கள். மொத்தம் 14 திரைப்படங்களின் பெயர்களில் 11 திரைப்படங்களின் தலைப்புகளை அனுப்பியிருக்கிறீர்கள்.
      பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  5. மொத்தம் 14 (பதினான்கு) திரைப்படங்கள் இதுவரை மெய்யெழுத்துக்களே தலைப்பில் இன்றி, 8, 9, 10, 11 எழுத்துக்களில் தலைப்புகளாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

    அந்த திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (விடைகள்):

    1. அதிரூப அமராவதி (1935) - 9
    2. லீலாவதி சுலோசனா (1936) - 8
    3. அனுபவி ராஜா அனுபவி (1967) - 10
    4. ஒரு இரவு ஒரு பறவை (1981) - 10
    5. மாமியாரா மருமகளா (1982) - 9
    6. ஒரு வாரிசு உருவாகிறது (1982) - 11
    7. ஒரு ஓடை நதியாகிறது (1983) - 10
    8. யாரோ எழுதிய கவிதை (1986) - 9
    9. திருமதி ஒரு வெகுமதி (1987) - 10
    10. உயிரோடு உயிராக (1998) - 8
    11. சிகாமணி ரமாமணி (2001) - 8
    12. இளசு ரவுசு புதுசு (2003) - 9
    13. திரு திரு துறு துறு (2009) - 8
    14. வெயிலோடு விளையாடு (2012) - 8

    இவற்றில் 11 எழுத்துக்களைக் கொண்ட "ஒரு வாரிசு உருவாகிறது" என்ற திரைப்படம் தான், அதிக எழுத்துக்களை மெய்யெழுத்துக்களே இன்றி, தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம்.

    இந்த 14 (பதினான்கு) திரைப்படங்களின் பெயர்களையும் சரியாக எழுதி அனுப்பியவர் "மதுமதி விட்டல்ராவ்" (ஒரே ஒருவர்) மட்டுமே. அவருக்கு SPECIAL பாராட்டுக்கள்.

    அடுத்தபடியாக, முத்து சுப்ரமண்யம் 11 திரைப்படங்களின் பெயர்களை அனுப்பியிருந்தார். அவருக்கும் பாராட்டுக்கள்.

    மாதவ் மூர்த்தி ஒரே ஒரு திரைப்படத்தின் பெயரை மட்டும் அனுப்பியிருந்தார்.

    பங்கு கொண்ட மூவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete