Friday, November 22, 2013

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 2


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 2

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

குறுக்காக:
3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)
6.சந்து கட்டிடம் இடிக்க கோபித்து கொள்ளக்கூடாது. இது அரசாணை (4)
7.தன் வலையில் சிக்கியவனை தாக்கி முன் செல்பவன் (4)
8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)
13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3)
14.பாரி போல வாரி வழங்குபவர் (4)
15.அப்பனைப் பாடுபவர் தலைசிறந்த வேதம் ஓதாது விவரிக்க தடுமாறினார் (4)
16.தமையன் இளையவனைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,3)

நெடுக்காக:
1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)
2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண்டு ஓட்டிய தோணிகள் (5)
4.மன்மதனிடம் இருந்து அறியாமை நீங்கியதால் மானிடனாக மாறினான் (4)
5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)
9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)
10.அமைதி வராமல் குழப்பத்தில் தூரம் போய்விட்ட சோழன் மகள் (5)
11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)
12.சுகத்தால் தள்ளாடி கடைசியில் தான் கடித்ததால் தப்பித்த சிற்றெறும்பு (4)
13.இடையூறுகளைக் களைந்து சென்றால் வரும் ஐஸ்வர்யம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

12 comments:

  1. ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:
    "அருமையான புதிர் . நன்றி "

    வைத்தியநாதன்,
    உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லா விடைகளையும் சரியாக முதன் முதலில் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. சாந்தி நாராயணன் அவர்களது கருத்து,

    "All clues are very interesting. Enjoyed very much"

    ReplyDelete
  3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "Wow.... wonderful to see the second crossword so soon. And the clues are awesome... Very much liked most of the clues.

    மிகவும் ரசித்த குறிப்புகள்:
    குறுக்காக: 3, 6, 7, 8, 13, 15
    நெடுக்காக: 1, 2, 5, 10, 13

    See... Almost liked all the clues. :)... Wonderful job and keep up the great work."

    ReplyDelete
    Replies
    1. நாகராஜன்,

      உங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. உங்களது விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  4. வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    "சென்ற புதிர் போன்றே எல்லா குறிப்புகளும் அருமை. தாங்கள் கூறி இருப்பது போன்றே வெள்ளித்திரை பெயர்கள் பற்றி கண்டிப்பாகவே மிக குறைந்த விவரம் அறிந்த நான் ஓரளவுக்கு விடை கண்டு அளித்துள்ளேன் . என்னை மிகவும் மண்டை காயவைத்த குறிப்புகள்: 5 நெ, 11 நெ. விடைகள் கண்டபின் குறிப்புகளுடன் பொருத்தி பார்ப்பது ஒரு சுவையான அனுபவம். மிகவும் ரசித்தேன்.. பணி தொடர விழைகிறேன். "

    பாலகிருஷ்ணன்,

    உங்களது கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் விடைகள் அனைத்தும் சரியானவை. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. ஹரி பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    "தமிழ்க் குறுக்கெழுத்து அமைப்போரின் வரிசையில் மற்றும் ஒருவர் சேர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய முதல் புதிரையும் மிகவும் ரசித்தேன், ஆனால் ஏதோ காரணங்களால் முடித்ததும் அனுப்ப விட்டுவிட்டேன்.
    இந்தப் புதிரை விவரிக்க வேண்டுமானால், 1 நெடுக்கின் விடை மிகப் பொருத்தமாக இருக்கும்.. விடைகளின் ஒவ்வொரு எழுத்திற்கும் புதிர்களில் சரியான குறிப்பு அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே போல, விடைகளுக்குத் தேவையில்லாத குறிப்பு வார்த்தைகள் எதுவும் இல்லாமலும், அர்த்தமுள்ள குறிப்புக்களாகவும் அளிப்பது அதை விட கடினமானது. எல்லாவற்றிற்கும் மேல், ஒரு குறிப்பிட்ட 'தீம்'-க்குள் கட்டுப்பட்டு சொற்களைத் தேர்ந்தெடுப்பது சாமானியமல்ல. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ஹரி பாலகிருஷ்ணன்,

    உங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    "மிக அருமையான சிந்திக்க வைத்த குறிப்புகள்
    தொடருட்டும் இந்த குறுக்கெழுத்துப் புதிர்கள்"

    பாராட்டுகளுக்கு நன்றி ராமையா அவர்களே.

    ReplyDelete
  7. முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    "அனைத்துக் குறிப்புக்களும் சுவையகவும், சிந்தனையைத் தூண்டுவனவாகவும் இருந்தன. 1, 3: மிகவும் ரசித்த குறிப்புகள். இரண்டு புது சொற்கள் அறிந்து கொண்டேன். 11 நெ. மிக யோசிக்க வைத்தது. மனமார்ந்த பாராட்டுகள்."

    பாராட்டுகளுக்கு நன்றி முத்து அவர்களே.

    ReplyDelete
  8. பார்த்தசாரதி சீனிவாசன் அவர்களது கருத்து:

    "Another winner from you. I know how difficult it is to prepare thematic crosswords in Tamil and how difficult it is to make two on the same topic. Congrats for keeping up the quality.

    பிடித்த குறிப்புகள்

    குறுக்காக:

    3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)

    நெடுக்காக:

    1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)

    2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண்டு ஓட்டிய தோணிகள் (5)

    5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)

    9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)

    11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)

    கொஞ்சம் குழப்பும் குறிப்புகள்

    குறுக்காக:

    8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)

    நெடுக்காக:

    13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3) "

    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. பார்த்தசாரதி அவர்களே. தங்களுக்கு பிடித்த குறிப்புகளை கூறியதற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. பவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:

    "எங்கள் இருவருக்கும் அனைத்து புதிர்களும் ரொம்ப பிடித்திருக்கின்றன. ரசித்து புதிர்களை விடுவிக்கிறோம். அறுபது வயதுக்கப்புறம் பள்ளிப்பருவ உற்சாகம் பெருகுவது எங்கள் அதிர்ஷ்டமே!"

    உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி பவளமணி பிரகாசம் அவர்களே. - ராமராவ்

    ReplyDelete
  10. யோசிப்பவர் அவர்களது கருத்து:

    "ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மரு, இல் போன்றவை கடினப் பதங்கள். ஆழ்ந்த தமிழறிவு இல்லாத என் போன்றோர்க்கு அகராதி இல்லாமல் புரியாத வார்த்தைகள் இவை. என் போன்றோர்க்காக கொஞ்சம் எல்லோருக்கும் தெரிந்த பதங்களை உபயோகித்தால் நன்றாக இருக்கும்.எனது ஆரம்ப கால குறுக்கெழுத்துகளில், இதே போல் அகராதி பார்த்து கண்டுபிடிக்க வேண்டிய பதங்களை நானும் உபயோகித்திருக்கிறேன். ஆனால் புதிர் அவிழ்ப்பவரைப் பொறுத்தவரை, குறுக்கெழுத்து தீர்க்க அகராதியில் தேடுவது என்பது ஒரு எரிச்சலான வேலை என்பதை உணர்ந்தேன். எந்த ஒரு புதிரும் சுவாரஸ்யமாக இருக்கும்வரைதான் அது நிறைய பேருக்கு பிடிக்கும். கடினப் பதங்கள் புதிதாய் புதிரில் ஆர்வங்க்காட்டி அவிழ்ப்பவர்களை பயமுறுத்தி ஓட வைக்கின்றன என்பது எனது கருத்து."

    "உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. மரு என்ற சொல் கடினம் தான். ஒப்புக்கொள்கிறேன்.
    இன்னொன்று: முடிந்த வரை நான் கொடுக்கும் குறிப்பு வாக்கியம் ஓரளவு கோர்வையுள்ள வாக்கியமாக இருக்க முயற்சிக்கிறேன். சிலவற்றிற்கு அகராதி தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் குறிப்பு வாக்கியம் meaningful ஆக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

    திரை ஜாலம் புதிர்களில் கூட பலர் பங்கு கொள்ளாததன் காரணம் புதிர்களை விடுவிக்க கணினியை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும். பலர் அதற்கு தயாராயில்லை. ஆனால் திரைஜாலம் புதிர்கள் அப்படி அமையாதே. என்ன செய்வது? திரைஜாலம் புதிர்களை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரை ஆர்வம் இருந்தால் எந்த புதிரையும் அவிழ்த்துவிடலாம்.
    நீங்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு முடிந்தவரை, சுலபமான சொற்கள் குறிப்புகளில் இருப்பதாக பார்த்துக் கொள்கிறேன். ஆனால் சில விடைகளுக்கு இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. திரைப்படப் பெயர்களை வைத்து குறுக்கெழுத்துப் புதிர் அமைப்பது மற்ற குறுக்கெழுத்துப் புதிர்களை விட மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இந்த திரை குறுக்கெழுத்துப் புதிரில் மற்ற புதிரைக் காட்டிலும் மேலும் ஒரு CLUE உள்ளதே. மேலும் விடைகள் ஒன்றும் பெரிய சொற்கள் அல்ல. மிஞ்சிப் போனால் maximum 6 அல்லது 7 எழுத்துக்கள் தான். முடிந்தவரை நானும் சுலபமான சொற்கள் இருப்பதாக பார்த்துக்கொள்கிறேன்." ----- ராமராவ்

    ReplyDelete
  11. திரை குறுக்கெழுத்துப் புதிர் - 2 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:

    1. ராமச்சந்திரன் வைத்தியநாதன்

    2. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்

    3. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்

    4. ஹரி பாலகிருஷ்ணன்

    5. ராமையா நாராயணன்

    6. K.R.சந்தானம்

    7. மதுமதி விட்டல்ராவ்

    8. பவளமணி பிரகாசம்

    9. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

    10. சாந்தி நாராயணன்

    11. முத்து சுப்ரமண்யம்

    12. மாதவ் மூர்த்தி

    13. சுரேஷ் பாபு

    14. சௌதாமினி சுப்ரமண்யம்

    15. ஸ்ரீதரன் துரைவேலு

    16. அருந்ததி

    17. யோசிப்பவர்

    18. லாவண்யா சுதாகர்

    19. மாதவன் வரதாச்சாரி

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete