Saturday, December 14, 2013

திரைக்கதம்பம் மலர் - 3


திரைக்கதம்பம்    மலர் - 2 ல் கேட்கப்பட்ட கேள்வி:


மெய்யெழுத்துக்களே  தலைப்புகளில் இல்லாத  8, 9, 10, 11 எழுத்துக்களைக் கொண்ட  திரைப்படங்களின்  பெயர்களை  அனுப்ப வேண்டும். 

விடைகள்:
 
மொத்தம் 14 (பதினான்கு) திரைப்படங்கள் இதுவரை மெய்யெழுத்துக்களே தலைப்பில் இன்றி, 8, 9, 10, 11 எழுத்துக்களில் தலைப்புகளாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

அந்த திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (விடைகள்):

1.    அதிரூப அமராவதி              (1935) - 9
2.    லீலாவதி சுலோசனா          (1936) - 8
3.    அனுபவி ராஜா அனுபவி     (1967) - 10
4.    ஒரு இரவு ஒரு பறவை       (1981) - 10
5.    மாமியாரா மருமகளா         (1982) - 9
6.    ஒரு வாரிசு உருவாகிறது    (1982) - 11
7.    ஒரு ஓடை நதியாகிறது      (1983) - 10
8.    யாரோ எழுதிய கவிதை     (1986) - 9
9.    திருமதி ஒரு வெகுமதி       (1987) - 10
10.  உயிரோடு உயிராக             (1998) - 8
11.  சிகாமணி ரமாமணி           (2001) - 8
12.  இளசு ரவுசு புதுசு                 (2003) - 9
13.  திரு திரு துறு துறு              (2009) - 8
14.  வெயிலோடு விளையாடு   (2012) - 8



இவற்றில் 11 எழுத்துக்களைக் கொண்ட "ஒரு வாரிசு உருவாகிறது" என்ற திரைப்படம் தான், அதிக எழுத்துக்களை மெய்யெழுத்துக்களே இன்றி, தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம். 


 
திரைக்கதம்பம் மலர் - 3


திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.


தமிழ் எழுத்துக்களை உயிரெழுத்துக்கள் வருக்கம், உயிர்மெய்யெழுத்துக்கள் வருக்கம் என்று பிரித்துக்கொள்ளலாம்.
 
உயிரெழுத்துக்கள் வருக்கம் :  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ 

உயிர்மெய்யெழுத்துக்கள் வருக்கம்  மொத்தம் 18.
அவை: க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன - வருக்கங்கள்.
உதாரணமாக,
"க" வருக்கம்:   க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ 
"த" வருக்கம்:   த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ
"ம" வருக்கம்:  ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ
                  

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, ஒரு சில திரைப்படங்களே வெளிவந்துள்ளன.
 
உதாரணமாக, கீழே சில திரைப்படங்களின் பெயர்கள் அல்லாத சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன்.    பாப்பா, தித்தித்தது, காக்கை    
  

திரைக்கதம்பம்  மலர்  - 3 க்கான கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, வெளிவந்துள்ள திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்பலாம். 
 
குறிப்பு:

விடைகள் மொத்தமே  9 (ஒன்பது) திரைப்படங்கள் தான். அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.   

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

விடைகளை பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்பவும்.

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.

http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்   

4 comments:

  1. லீலை
    ராரா
    கொக்கி
    பாபி
    காக்க காக்க
    பாபா
    பாபு
    அஆஇஈ





    ReplyDelete
    Replies
    1. முத்து,

      "பாபி" என்று தமிழில் தயாரிக்கப்பட்டு திரைப்படம் வெளிவரவில்லை. reversetamilcinema.blospot.com ல் உள்ள பெயர் தவறு.

      Delete
  2. 1) baabaa
    2) leelai
    3) raa raa
    4) a Aa e Ee
    5) a Aa
    6) Yaa Yaa

    ReplyDelete