Wednesday, December 18, 2013

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.


குறுக்காக:
5. பாடகரின் கடன் நீங்கியதால் வள்ளல் ஆனார் (2)
6. உறவினில் இருபக்கத்தார் பிரிந்தாலும் தப்பி தவறி உதித்த அபூர்வ ஜென்மம் (6)
7. எட்டு கைகளைக் கொண்ட பெண் தெய்வம் நவராத்திரி நாயகி (5)
8. தங்கமாக ஓடும் காவிரி (3)
10. விநோதமாக வலிக்க விட்டு திரும்பினாள் மணிமேகலையை ஈன்றவள் (3)
12. பெரும் செல்வந்தன் ஆக மாறிய அரச குமாரன் (5)
15. சுந்தரக் கடவுள் தேர்களை ஓட்டி அரசாங்க தமிழர்களை நிலைகுலையச் செய்தார் (6)
16. காவல் இருக்கும் சிறிய அறை தெரிய வேண்டாம் (2)

நெடுக்காக:
1. கடைசியில் பரிசு பெறாமல் யார் பெரிசு எனக்குழப்பும் ராமசாமி (4)
2. சம்பள நாளன்று விலையாக போன தேமுதிக தலைவியால் கலவரமானது (3,2)
3. அப்புறமாக கொஞ்சம் அதிகமாக பவுடர் பூசு (3)
4. நடுவில் கொஞ்சம் இழந்ததை மறப்பவன் வீரன் (4)
9. மெய்மறந்து மிதித்ததாக மாற்றியமைக்கப்பட்ட தாளம் (5)
11. கஷ்டத்தில் மிதந்தான் உழவன். மகிழ்ந்தான் இல்லை அமுத மொழி பேசுபவன் (4)
13. பாரததேசச் சின்னமான சத நாயகன் (4)
14. மாதர் மயங்கிய பாரத மன்னர் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, December 14, 2013

திரைக்கதம்பம் மலர் - 3


திரைக்கதம்பம்    மலர் - 2 ல் கேட்கப்பட்ட கேள்வி:


மெய்யெழுத்துக்களே  தலைப்புகளில் இல்லாத  8, 9, 10, 11 எழுத்துக்களைக் கொண்ட  திரைப்படங்களின்  பெயர்களை  அனுப்ப வேண்டும். 

விடைகள்:
 
மொத்தம் 14 (பதினான்கு) திரைப்படங்கள் இதுவரை மெய்யெழுத்துக்களே தலைப்பில் இன்றி, 8, 9, 10, 11 எழுத்துக்களில் தலைப்புகளாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

அந்த திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (விடைகள்):

1.    அதிரூப அமராவதி              (1935) - 9
2.    லீலாவதி சுலோசனா          (1936) - 8
3.    அனுபவி ராஜா அனுபவி     (1967) - 10
4.    ஒரு இரவு ஒரு பறவை       (1981) - 10
5.    மாமியாரா மருமகளா         (1982) - 9
6.    ஒரு வாரிசு உருவாகிறது    (1982) - 11
7.    ஒரு ஓடை நதியாகிறது      (1983) - 10
8.    யாரோ எழுதிய கவிதை     (1986) - 9
9.    திருமதி ஒரு வெகுமதி       (1987) - 10
10.  உயிரோடு உயிராக             (1998) - 8
11.  சிகாமணி ரமாமணி           (2001) - 8
12.  இளசு ரவுசு புதுசு                 (2003) - 9
13.  திரு திரு துறு துறு              (2009) - 8
14.  வெயிலோடு விளையாடு   (2012) - 8



இவற்றில் 11 எழுத்துக்களைக் கொண்ட "ஒரு வாரிசு உருவாகிறது" என்ற திரைப்படம் தான், அதிக எழுத்துக்களை மெய்யெழுத்துக்களே இன்றி, தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம். 


 
திரைக்கதம்பம் மலர் - 3


திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.


தமிழ் எழுத்துக்களை உயிரெழுத்துக்கள் வருக்கம், உயிர்மெய்யெழுத்துக்கள் வருக்கம் என்று பிரித்துக்கொள்ளலாம்.
 
உயிரெழுத்துக்கள் வருக்கம் :  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ 

உயிர்மெய்யெழுத்துக்கள் வருக்கம்  மொத்தம் 18.
அவை: க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன - வருக்கங்கள்.
உதாரணமாக,
"க" வருக்கம்:   க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ 
"த" வருக்கம்:   த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ
"ம" வருக்கம்:  ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ
                  

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, ஒரு சில திரைப்படங்களே வெளிவந்துள்ளன.
 
உதாரணமாக, கீழே சில திரைப்படங்களின் பெயர்கள் அல்லாத சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன்.    பாப்பா, தித்தித்தது, காக்கை    
  

திரைக்கதம்பம்  மலர்  - 3 க்கான கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, வெளிவந்துள்ள திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்பலாம். 
 
குறிப்பு:

விடைகள் மொத்தமே  9 (ஒன்பது) திரைப்படங்கள் தான். அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.   

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

விடைகளை பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்பவும்.

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.

http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்