Wednesday, December 18, 2013

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.


குறுக்காக:
5. பாடகரின் கடன் நீங்கியதால் வள்ளல் ஆனார் (2)
6. உறவினில் இருபக்கத்தார் பிரிந்தாலும் தப்பி தவறி உதித்த அபூர்வ ஜென்மம் (6)
7. எட்டு கைகளைக் கொண்ட பெண் தெய்வம் நவராத்திரி நாயகி (5)
8. தங்கமாக ஓடும் காவிரி (3)
10. விநோதமாக வலிக்க விட்டு திரும்பினாள் மணிமேகலையை ஈன்றவள் (3)
12. பெரும் செல்வந்தன் ஆக மாறிய அரச குமாரன் (5)
15. சுந்தரக் கடவுள் தேர்களை ஓட்டி அரசாங்க தமிழர்களை நிலைகுலையச் செய்தார் (6)
16. காவல் இருக்கும் சிறிய அறை தெரிய வேண்டாம் (2)

நெடுக்காக:
1. கடைசியில் பரிசு பெறாமல் யார் பெரிசு எனக்குழப்பும் ராமசாமி (4)
2. சம்பள நாளன்று விலையாக போன தேமுதிக தலைவியால் கலவரமானது (3,2)
3. அப்புறமாக கொஞ்சம் அதிகமாக பவுடர் பூசு (3)
4. நடுவில் கொஞ்சம் இழந்ததை மறப்பவன் வீரன் (4)
9. மெய்மறந்து மிதித்ததாக மாற்றியமைக்கப்பட்ட தாளம் (5)
11. கஷ்டத்தில் மிதந்தான் உழவன். மகிழ்ந்தான் இல்லை அமுத மொழி பேசுபவன் (4)
13. பாரததேசச் சின்னமான சத நாயகன் (4)
14. மாதர் மயங்கிய பாரத மன்னர் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. சுரேஷ் பாபு அவர்களது கருத்து:

    "எல்லா குறிப்புகளுமே எழுத்துகளை எடுத்து மாற்றுபவையாக மட்டும் இருக்கின்றன. 13 நெடு: போன்ற குறிப்புகளை அதிகப்படுத்துங்கள்."

    சுரேஷ் பாபு,

    "தங்கள் கருத்துக்கு நன்றி. பெரும்பாலான குறிப்புகள் அவ்வாறு அமைந்து விட்டன. குறிப்புகளை உருவாக்குவது கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஏனென்றால் விடைகள் அப்படி இருக்கின்றன. அடுத்த முறை வேறு விதங்களில் முயற்சிக்கிறேன்.
    சரியான விடைகளை வெகு சீக்கிரமாக அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி."

    ReplyDelete
  2. ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    "இந்த முறை எல்லாமே மிக எளிதாக இருந்தன."

    ராமையா,

    "உங்கள் கருத்துக்கு நன்றி. சரியான விடைகளை விரைவில் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி."

    ReplyDelete
  3. முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    "வெகு அருமையான புதிர்!"

    முத்து,

    உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களது எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி."

    ReplyDelete
  4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "Dear Ramarao,
    Wonderful clues and some of them are very very good and made me think a lot. Keep up the great work. Let me know if the answers are right."

    நாகராஜன்,

    உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி."

    ReplyDelete
  5. வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    "வழக்கம் போல் எல்லாமே அருமை. மிகவும் மெய் மறந்து உவந்து ரசித்த குறிப்புகள்
    மணிமேகலை, சிறிய அறை , தாளம் பற்றியவை. விடை கண்டு பொருத்தி பார்த்து மகிழ்ந்தேன்."

    பாலகிருஷ்ணன்,

    "உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி."

    ReplyDelete
  6. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    "Another very good one. Congrats.
    பிடித்த குறிப்புகள்
    குறுக்காக:
    6. உறவினில் இருபக்கத்தார் பிரிந்தாலும் தப்பி தவறி உதித்த அபூர்வ ஜென்மம் (6)
    8. தங்கமாக ஓடும் காவிரி (3)
    10. விநோதமாக வலிக்க விட்டு திரும்பினாள் மணிமேகலையை ஈன்றவள் (3)
    11. கஷ்டத்தில் மிதந்தான் உழவன். மகிழ்ந்தான் இல்லை அமுத மொழி பேசுபவன் (4)
    நெடுக்காக:
    1. கடைசியில் பரிசு பெறாமல் யார் பெரிசு எனக்குழப்பும் ராமசாமி (4)
    15. சுந்தரக் கடவுள் தேர்களை ஓட்டி அரசாங்க தமிழர்களை நிலைகுலையச் செய்தார் (6) "

    பார்த்தசாரதி,

    "உங்களது கருத்துகளுக்கும், பிடித்த குறிப்புகளை அனுப்பியதற்கும் மிக்க நன்றி."

    ராமராவ்

    ReplyDelete
  7. பவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:

    "good"

    ReplyDelete
  8. நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    "SUPER"

    ReplyDelete
  9. திரை குறுக்கெழுத்துப் புதிர் - 3 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. ராமையா நாராயணன்
    3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    4. முத்து சுப்ரமண்யம்
    5. ஸ்ரீதரன் துரைவேலு
    6. மாதவ் மூர்த்தி
    7. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    8. அருந்ததி
    9. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    10. ஹரி பாலகிருஷ்ணன்
    11. K.R.சந்தானம்
    12. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    13. சாந்தி நாராயணன்
    14. மாதவன் வரதாச்சாரி
    15. பவளமணி பிரகாசம்
    16. நாகமணி ஆனந்தம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete