Tuesday, September 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 39


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 39

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்றில் ஆங்கிலச்சொல் உள்ளது.


குறுக்காக:


5. சத்தம் செய்யாது இறுதி மூச்சு விடு (2)

6. பருத்துத் தடித்த மன்மத மலர் (6)

7. ரத்தினத்திலான இடையணியை அணிந்த பெண் துறவி (5)

8, 9 நெடு: திசை தவறிய கண்ணழகிக்கு வட்டமிடும் சித்தி, கவிஞனின் இளம் காதலி (3,5)

10. 4 நெடு. பார்க்கவும்

12. தரை மீது உடைந்த படம் கிடக்கும் கூடம் (5)

15. அனேகமாக சகாயம் தேர்தலில் அடிபட்டால் நேசநாடு சேர்ந்திடுவார் (3,3)

16. மெய்யற்ற குழந்தை தெய்வத்தின் அவதாரமோ? (2)


நெடுக்காக:


1. சக்கரம் கழலாமல் தடுக்கும் மச்சானை குழுவில் உள்ளே சேர்த்துக்கொள். வீட்டில் சேர்க்க வேண்டாம் (4)

2. செடிமரங்களை கொஞ்சம் வெட்டிவிட்டால் பெரும் கலவரம் ஏற்படும் (5)

3. முதல் லக்கினத்தில் மாங்கல்யம் திரும்பவும் அணிந்த பெண் (3)

4, 10 குறு: தலைவரின் பெண், கஷ்டப்படுகையில் சமமாக கடன் கேப்பாள். அன்பாக இல்லை. (4,3)

9. 8 குறு. பார்க்கவும்

11. நசுங்கிய காதணிகளை அணிந்தவன் கடைசியில் வாலிபன் அல்ல, ஒரு சோதிடன் (4)

13. பழம் பானமளிப்பதில் உற்சாகம் நெஞ்சில் இல்லை (4)

14. திப்பிலி வைத்திருந்த சீதாதேவி (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிகவும் ரசிக்கும்படி உள்ளது. கொஞ்சம் கூட குழப்பம் இல்லாத தெளிவான குறிப்புகள். அநேக சினிமாப் பெயர்கள் எனக்குத் தெரியாது, ஆனாலும் குறுக்கெழுத்து விடுவித்தனாலே மட்டுமே விடை கிடைத்தன.

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: வட்டமிடும் சித்தி; வீட்டில் சேராத மச்சான்; தலைவரின் பெண்;

    ReplyDelete
  3. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual very nice clues. Keep up the great work

    ReplyDelete
  4. G.K.சங்கர் அவர்களது கருத்து:

    எல்லாக் குறிப்புகளும் வழக்கம் போல் அருமை.

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Excellent crossword with challenging clues. Keep it up

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 39 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. ஆர்.வைத்தியநாதன்
    2. சுரேஷ் பாபு
    3. ராமையா நாராயணன்
    4. மாதவ் மூர்த்தி
    5. முத்து சுப்ரமண்யம்
    6. பொன்சந்தர்
    7. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    8. சாந்தி நாராயணன்
    9. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    10. பாலாஜி
    11. K.R. சந்தானம்
    12. சௌதாமினி சுப்ரமண்யம்
    13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    14. G.K. சங்கர்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete