Tuesday, February 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 56


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 56

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


3. ஊருக்கு அதிகாரி, தேசத்து கூர்மம் (4)

4. குள்ளனை வயல் மீது நிறுத்தி தியானம் பண்ணு (4,2)

6. டில்லி மருமகனே! வெளுத்துக்கட்டு! (3)

7. வாளுடன் தலைக்கனமின்றி களம் செல்லும் சேனை (5)

9. இங்கிலாந்து நண்பர்கள் (5)

10. கனிவளம் மிகுந்த இடம் (3)

12. மாவுத்தன் கடைசியில் இப்படியா கொடூரமாக கனைப்பான்? (6)

13. 8 நெடு: பார்க்கவும்


நெடுக்காக:


1. தாய்மண்ணுக்கு வணக்கம் செலுத்த, மாயவரம் வந்ததே பெரும் தவறு (3,4)

2. வீட்டுக்காரி (3)

3. ஒருவகையில் தாய்நாட்டிற்கு அதிகம் நன்றியுள்ளது (2,3)

5. தவிலின் லயங்கள் ஆடம்பரங்கள் (7)

8, 13 குறு: வேலையாளை விட்டுவிடு, மடையா! விமலை சேர்க்காதே! ஆக்ரோஷத்துடன் மிருகங்களை பந்தாடு! (5,4)

11. குடுவைக்குப்பின்னுள் ஒரு குடுவை (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. கடந்த 25 வருடங்களில் வந்த திரைப்படப் பெயர்களில் பாதிக்கு மேல் தெரியாததால் பொதுவாக இரண்டு விடைகளுக்கு மேல் என்னால் கண்டுபிடிக்க முடியாது. இன்று முயன்றேன். 3. குறு. மற்றும் 8,13 மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. திரு வாஞ்சிநாதன் அவர்களது கருத்து:

    கடந்த 25 வருடங்களில் வந்த திரைப்படப் பெயர்களில் பாதிக்கு மேல் தெரியாததால் பொதுவாக இரண்டு விடைகளுக்கு மேல் என்னால் கண்டுபிடிக்க முடியாது. இன்று முயன்றேன்.

    3. குறு. மற்றும் 8,13 மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " clue for vetaiaadu vilayadu is brilliant "

    ReplyDelete
  4. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    "இம்முறை எனக்குக் கொஞ்சம் கடினமாகவே இருந்தது"

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "Very nice clues yet again. Thank you and keep up the great work."

    ReplyDelete
  6. திரு G.K.சங்கர் அவர்களின் கருத்து:

    குறிப்புகள் அனைத்தும் அருமை. நன்றி.

    ReplyDelete
  7. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    "அருமையான புதிராக்கம்"

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 56 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. வாஞ்சிநாதன்
    3. பவளமணி பிரகாசம்
    4. ஆர்.வைத்தியநாதன்
    5. ராமையா நாராயணன்
    6. K.R.சந்தானம்
    7. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    8. பாலாஜி
    9. ஆனந்தி ராகவ்
    10. மாதவ் மூர்த்தி
    11. பொன்சந்தர்
    12. சாந்தி நாராயணன்
    13. G.K.சங்கர்
    14. சுரேஷ் பாபு
    15. கோவிந்தராஜன்
    16. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete