Friday, September 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 75


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 75

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3. 11 நெடு: பார்க்கவும் (4)

4. வாசவனை வென்ற மேகநாதன் (6)

6. மதமாற்றம் செய்தால் எதன் உயிரை எடுப்பான்? (3)

7. பெரிய மகன் மருமகன்? (5)

9. சரித்திரம் படைக்காத கவிதைகள் தாமே இய்ற்றுபவரே அறிவாளிகள் (5)

10. பணயக்கைதி அரைகுறையாய் செய்யும் வழிபாடு (3)

12. இளம்பெண்ணை இழந்து வருந்தும் மகராஜனின் கும்பம் அவனது தலைக்கேறும் (6)

13. ஆனந்தத்தில் திளைத்திருக்கும் எல்லைப்புற காவலரா மாமன்னர்? (4)


நெடுக்காக:


1. அமர்ந்திருந்தாரை அதிகம் மயக்கும் மலர் (7)

2. ஆங்கிலேயன் பெயரில் ரயிலடி தொடங்கிய சமயம் (3)

3. மேகமூட்டத்தில் கருகல் இன்றி காந்தத்தால் எரியும் வாணம் (5)

5. உறங்குவதற்கான இடமா பாடசாலை? (7)

8. தேநீர் விடுதி தலைவன் ஜாடை கண்டீரா? அதிகம் மாறியுள்ளதே! (1,2,2)

11, 3 குறு. மனிதத்தலையை விழுங்கிய விலங்கும், கொஞ்சம் பழச்சாறு அருந்திய அரசனும் சொந்தக்காரர்கள் (3,4)



Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திருமதி பவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:

    Very tough. You are becoming more clever and I am becoming more dull!!!

    ReplyDelete
  2. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Thanks for a nice crossword!

    ReplyDelete
  3. மிக மிக ரசித்த புதிர். எல்லாக் குறிப்புகளுமே மிக ரசிக்கும்படி இருந்தாலும், 1.நெ, 6 குறு, 7 குறு மிக ரசிக்கும்படி உள்ளன.

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    ரசித்தவை

    2 நெ; 6 கு; 7 கு

    திண்டாட வைத்தது 3,11

    ReplyDelete
  5. திரு விஜய் சங்கர் அவர்களது கருத்து:

    11, 3 மிகவும் யோசிக்க வைத்தது!

    ReplyDelete
  6. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual wonderful clues. Wondering how you are able to come up with these sort of nice clues every time. Keep up the great work.

    ReplyDelete
  7. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    2, 11, 3 கு: மிக ரசித்த குறிப்புகள்

    ReplyDelete
  8. திரு குணா அவர்களது கருத்து:

    2,13,11,10---அருமை

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 75 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      பவளமணி பிரகாசம் 
    2.      பொன்சந்தர்     
    3.      மாதவ் மூர்த்தி            
    4.      பாலாஜி   
    5.      G.K.சங்கர்
    6.      ராமையா நாராயணன்    
    7.      ஆர்.வைத்தியநாதன்                                        
    8.      சுரேஷ் பாபு                    
    9.      விஜய் சங்கர் 
    10.     முத்து சுப்ரமண்யம் 
    11.     நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்     
    12.     குணா
    13.     ஆனந்தி ராகவ்          
      
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete