Saturday, December 21, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 78


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 78

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் இரண்டு ஆங்கிலச்சொற்கள்.


குறுக்காக:


3. மங்காராமை ரொம்பவும் மலரோடு தாக்கி திரும்பும் வளைதடி (4)

4. "தானே ஈசன்" என, ரத்தத் துளிகளை சிந்தியபின் தப்பாக நாரதன் வாசித்தான் (4,2)

6. வேறு விலங்கை அரைகுறையாய் துரத்தும் புலி (3)

7. தெருப்புறம் மேட்டில் வீடு இல்லாமல் இல்லையோ? (5)

9. சூடம் கையில் ஏற்ற மலர் மேலேபோகவில்லை (5)

10. 11 நெடு. பார்க்கவும்

12. முதல் மனைவியுடன் ஊர்விட்டு பயணிப்பதில் கலங்கினான் முத்துப்பிள்ளை (6)

13. இளையவன் இருக்கையில் படைக்கு அண்ணன் பயப்பட மாட்டான் (4)


நெடுக்காக:


1. தெங்கு ஓலைத்துண்டு (7)

2. லெனின், ஸ்டாலின் வசமிருந்த கண்ணாடி வில்லை (3)

3. சுண்டினால் விழுவது நாணயத்தின் எந்தப் பக்கம்? (2,3)

5. ஸ்வரம் இல்லாமல் பண் பாடிய பராக்கிரமசாலி கட்டபொம்மனோ? (7)

8. மரம் சிதைத்து பிறகு சுற்றிய படைப்பாளி (5)

11. அதிகம் கதகதப்புண்டாவது ஒருவகையில் குற்றம் (3,3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு குணா அவர்களின் கருத்து:

    நெடுக்காக 8
    மரம் சிதைத்து பிறகு சுற்றிய படைப்பாளி

    குறுக்காக 6
    வேறு விலங்கை அரைகுறையாய் துரத்தும் புலி

    இரண்டும் அருமை

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக இரசித்த குறிப்புகள்: 3, 5

    ReplyDelete
  3. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual very nice clues.
    3 across is a very interesting one.
    6, 9, 12 across clues are very nice too.
    1 down is also an interesting one especially because it does not have enough clue words.
    5 down is also a nice one.

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Thanks for a nice crossword.

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:

    Another interesting and challenging puzzle which we have come to expect from you.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 78 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      பவளமணி பிரகாசம்  
    2.      ராமையா நாராயணன்  
    3.      பாலாஜி 
    4.      குணா 
    5.      கோவிந்தராஜன்    
    6.      சௌதாமினி சுப்ரமண்யம் 
    7.      முத்து சுப்ரமண்யம்                              
    8.      சுரேஷ் பாபு                  
    9.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 
    10.     G.K.சங்கர்  
    11.     மாதவ் மூர்த்தி 
    12.     ஆர்.வைத்தியநாதன்         
    13.     ஆனந்தி ராகவ்
    14.     பொன்சந்தர்  
    15.    K.R.சந்தானம் 
    16.    பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 
           
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete