Monday, March 23, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 81


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 81

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

* குறியிட்ட சொற்களுக்கு இணையான சொற்கள் புதிய சொற்கள்.


குறுக்காக:


5. கோபி தலைசீவும் இறுதிச்சுற்று (2)

6. அதிகம் சாம்பலாகி மடம் சிதைந்ததை காட்டும் திரைச்சித்திரம் ஜனரஞ்சகமானது (3,3)

7. சீலை வேட்டித்துண்டு கூட இருக்க மனோதிடம் உதவும் (3,2)

8. நேபாளத்து காவலாளி (3)

10. வளரத் தொடங்கும் கரு சேகரிப்பு (3)

12. உயிரோடு மாந்தன் மயங்கிக்கிடக்கும் தீவுக்கூட்டம் (3,2)

15. சகுந்தலை மாளிகை வாசலிலே ஆடையின்றி தவிக்கவைக்கும் அறைகூவலை எதிர்கொள் (3,3)

16. கௌரவம் விட்டுவிட்டு குடிக்கும் மது (2)


நெடுக்காக:


1. ஆறு கலைகளுக்கரசி முன்னே சின்னஞ்சிறு போர்வை (4)

2. செல்வம்* சேர்த்த வரை வர முடியாது தடுத்தவர் வெளிதேசத்து அதிகாரி (5)

3. குசலாம்பாளின் நமஸ்காரம் (3)

4. ஆண்கள் நடுவில் இடம் பிடிப்பவர் ஆவர் (4)

9. பூந்தமல்லி குளிர் கொஞ்சம் ஒத்துக்கொள்ளாத மலர்க்கொழுந்து (5)

11. கள்ளங்கபடு வேதனை செய்யும் (4)

13. ஆதி வீட்டை சுற்றும் மன்மதன்* பெரும் பராக்கிரமசாலி (4)

14. பாதி கிழிந்த ஜீன்ஸ் சட்டை அணிந்த கிறிஸ்து (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

7 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிக ரசித்த புதிர். சில புதிர்கள் விடை கிடைக்க கொஞ்சம் கடினமாக இருந்தது.

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக இரசித்தவை: கு. 5, 6, 7, 10, 15. நெடு. 1, 9, 11.

    ReplyDelete
  3. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    All the clues are very nice and 5 across took a long time for me to solve and a good one. Al usual wonderfully constructed clues. Keep up the great work

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    பிடித்த குறிப்பு: 10 குறு

    சில குறிப்புகள் கொஞ்சம் கடினம். நல்ல புதிர்.

    ReplyDelete
  5. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 5, 6, 15
    நெடுக்காக 1, 2, 9
    ஆகியவை அருமை

    ReplyDelete
  6. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    all clues are challenging and interesting.

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 81 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      மாதவ் மூர்த்தி
    2.      பவளமணி பிரகாசம்
    3.      ராமையா நாராயணன்
    4.      சுரேஷ் பாபு    
    5.      முத்து சுப்ரமண்யம்
    6.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 
    7.      G.K.சங்கர்                        
    8.      ஆர்.வைத்தியநாதன்              
    9.      பாலாஜி   
    10.    குணா
    11.    K.R.சந்தானம்   
    12.     சௌதாமினி சுப்ரமண்யம்           
    13.     கோவிந்தராஜன்   
    14.    ஆனந்தி ராகவ்            
    15.    பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 
    16.    பொன்சந்தர்   
             
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete